சீக், செப்டம்பர் -6, கெடா, சீக்கில் (Sik) தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதில், விரைவுப் பேருந்து தீயில் கருகுவதிலிருந்து தப்பியது.
புதன்கிழமை மாலை மூவரை ஏற்றிக் கொண்டு கோலாலம்பூர் TBS-சிலிருந்து Sik செல்லும் வழியில், Jalan Parit Panjang-கில் பேருந்தின் பின் பகுதி டயரில் திடீரென புகை வெளியாகி, ஏதோ எரிவது போன்ற வாடையும் ஏற்பட்டது.
அப்போது தற்செயலாக, அச்சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு-மீட்புத் துறை அதனை கவனித்து விட்டது.
உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், பேருந்தில் இருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 15 நிமிடங்களில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.
பிறகு பேருந்து நிறுவனத்தின் பொறியியலாளர் குழுவை தொடர்புக் கொண்டு, அங்கிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் Sik பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விடுவதற்காக பேருந்து ஓட்டுநர் பயணத்தைத் தொடர்ந்தார்.
தீ ஏற்பட்டதற்கான காரணமும், சேத விவரங்களும் ஆராயப்பட்டு வருகின்றன.