புத்ராஜெயா, ஆகஸ்ட் 27 – தொழிலாளர் மறுசீரமைப்புத் திட்டத்திற்கான (RTK 2.0) வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது முதலாளிகள் சம்பந்தப்பட்ட சரிபார்ப்பு செயல்முறை, மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
திடீரென இந்த வெளிநாட்டுத் தொழிலாளர் அனுமதியின் ஒப்புதல் செயல்முறை நிறுத்தப்பட்டதால், பல முதலாளிகள் நூறாயிரக்கணக்கான ரிங்கிட் இழப்பைச் சந்திக்க நேரிட்டது.
நூற்றுக்கணக்கான முதலாளிகள் நீண்ட RTK 2.0 விண்ணப்பச் செயல்முறையை முடிக்கவுள்ள நிலையில், குறைந்த அறிவிப்புகளைச் செய்து மூடியதால், ‘பணம் செலுத்திய’ நிலை ‘ரத்துசெய்யப்பட்டது’ என மாற்றலாகியதாக வணிகர்கள் தெரிவித்தனர்.
Interview – 3
ஆகையால் ஏறக்குறைய 200 வணிகர்களுக்கு மேல் கலந்து கொண்ட இன்றைய கூட்டத்தில், அனைத்து முதலாளிகளும் இணைந்து பிரதிநிதியின் வழி, இந்த RTK 2.0 விண்ணப்பத்தை மீண்டும் திறக்க மேல்முறையீட்டுச் செயல்முறைக்கான மனுவில் கையெழுத்திட்டனர்.
இணையக் கட்டணம் முறையாகச் செயல்படுவதில்லை, இறுதி நிமிடத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர் மறுசீரமைப்பு 2.0 திட்ட ஒதுக்கீட்டின் ஒப்புதல், குடிநுழைவுத்துறையின் குறைந்த அறிவிப்பு போன்ற சிக்கல்களும், உள்துறை அமைச்சிடம் முன்னிலைப்படுத்தப்பட்டதாக அதன் பிரதிநிதி விவரித்தார்.
Interview
Closing
நாட்டின் பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தங்களது கோரிக்கைக் குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.