கோலாலம்பூர், நவம்பர்-28, நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நேற்று ஒரே இரவில் அதிரடியாக உயர்ந்தது.
தற்போது 6 மாநிலங்களில் மொத்தமாக 10,743 குடும்பங்களைச் சேர்ந்த 35,261 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
இன்று காலை வரைக்குமான தகவலின் படி ஆக அதிகமாக கிளந்தானில் 29,022 பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
அங்கு Kota Bharu, Pasir Mas, Tumpat, Bachok, Tanah Merah, Pasir Puteh, Kuala Krai, Machang , Jeli ஆகிய 9 மாவட்டங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.
இவ்வேளையில் திரங்கானுவில் Marang, Dungun, Kemaman, Hulu Terengganu, Setiu, Besut ஆகிய 6 மாவட்டங்களில் 5,845 பேர் வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கெடாவில் 180 பேரும், பெர்லிசில் 166 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜோகூர், செகாமாட்டில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 28 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
பேராக், கிரியானில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
6 மாநிலங்களிலும் பாதிக்கப்பட்ட மொத்தப் பேரில் 2,600-க்கும் மேற்பட்டவர்கள் முதியவர்கள் ஆவர்.