Latestஇந்தியா

வேளாங்கண்ணியில் அதிர்ச்சி: கொடியேற்றத்தின் போது ஹீலியம் பலூன்கள் வெடித்துச் சிதறி 4 பக்தர்கள் தீக்காயம்

திருச்சி, ஆகஸ்ட்-31,தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழாக் கொடியேற்றத்தின் போது, அலங்கார ஹீலியம் பலூன்கள் வெடித்துச் சிதறியதில் 4 பக்தர்கள் தீக்காயமடைந்தனர்.

இந்தக் கொடியேற்ற விழாவுக்காக வழக்கம் போல் இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் பல்வேறு நாடுகளிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் கூடியுள்ளனர்.

இந்நிலையில்இந்திய நேரப்படி​ நேற்று மாலை 6.45 மணியளவில் பேராலயப் பேராயர் தலைமையில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.

அப்போது வெடிக்கப்பட்ட பட்டாசுகளிலிருந்து வெளிவந்த பொறிகள், கொடிமரத்தின் அருகே பறக்கவிடப்பட்ட ஹீலியம் வாயு பலூன்களின் மீது விழுந்ததில் அவை பலத்த சத்தத்துடன் தீப்பிடித்து வெடித்தன.

​இந்த விபத்தில் சென்னை மற்றும் பிற இடங்களைச் சேர்ந்த 4 பக்தர்கள் முகம் மற்றும் உடல்களில் தீக்காயமடைந்தனர்.

அவர்களுக்கு, உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

​சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 11 நாள் திருவிழா நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி தொடருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!