Latestமலேசியா

ஷா ஆலாமில் கும்பல் மோதலுக்குப் பின் கார் மோதி ஆடவர் பலி; கொலைக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது

ஷா ஆலாம், ஆகஸ்ட்-26,சிலாங்கூர், ஷா ஆலாம், தாமான் ஆலாம் மெகாவில் உள்ள ஜாலான் மண்டோலின் 33/5 பகுதியில் கும்பல் இடையே நிகழ்ந்த மோதலில், கார் மோதி ஆடவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

​நேற்று பிற்பகல் 2 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில், வெட்டுக்காயங்களுடன் கூடிய மோதலுக்குப் பிறகு, நீல நிற பெரோடுவா அல்ஸா கார் ஒன்று பாதிக்கப்பட்ட நபரின் மீது மோதியதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Sarudin Samah தெரிவித்தார்.

​கடுமையான காயங்களுக்கு உள்ளான அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

​இதனைத் தொடர்ந்து, விசாரணைக்கு உதவ ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் கொலை வழக்காக வகைப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

வைரலான ​இச்சம்பவம் குறித்த தகவல்களைக் கொண்ட பொது மக்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!