கோலாலம்பூர், ஏப்ரல்-14 – கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம், 2024 தேவாரப் போட்டியை ஏற்பாடுச் செய்துள்ளது.
DSK குழுமத்தின் ஒருங்கிணைப்பில், தேவஸ்தானத் தலைவர் தான்ஸ்ரீ நடராஜா அவர்களின் தலைமையில் அம்மாபெரும் தேவாரப் போட்டி வரும் ஏப்ரல் 27, சனிக்கிழமை நடக்கிறது.
கோலாலம்பூர், ஜாலான் துன் எச்.எஸ்.லீயில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் அன்றைய தினம் காலை 9 மணிக்குப் போட்டித் தொடங்குகிறது.
7 முதல் 15 வயது மற்றும் 16 வயதுக்கு மேல் என இருப் பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது.
முதல் பிரிவில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்போருக்கு முறையே 700 ரிங்கிட், 400 ரிங்கிட், 200 ரிங்கிட் பரிசாக வழங்கப்படும்.
16 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் முதல் நிலை வெற்றியாளருக்கு 1,000 ரிங்கிட் பரிசுப் பணமாக வழங்கப்படும்; இரண்டாம் மூன்றாம் இடங்களில் வருவோருக்கு முறையே 500 ரிங்கிட், 300 ரிங்கிட் வழங்கப்படுகிறது.
ஆர்வமுள்ளோர், கொடுக்கப்பட்டுள்ள QR Code-டை Scan செய்து இன்றே பதிந்துக் கொள்ளுமாறு தேவஸ்தானத்தின் அறங்காவலரும் DSK குழுமத்தின் நிறுவனருமான டத்தோ சிவகுமார் நடராஜா அன்போடு கேட்டுக் கொள்கிறார்.
போட்டியில் பதிந்துக் கொள்வதற்குகக் கடைசி நாள் ஏப்ரல் 24-ஙாம் தேதியாகும்.