Latestமலேசியா

ஹோங் கோங்கில் நெகாராகூ அவமதிப்பு: வலைப்பந்துப் போட்டியின் நேரலை ஒளிபரப்பில் பதிவான சம்பவத்தால் சர்ச்சை

கோலாலம்பூர், ஆகஸ்ட்-17-ஹோங் கோங்கில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியின் போது, மலேசியாவின் தேசிய கீதமான நெகாராகூ (Negaraku) அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

​ஆகஸ்ட் 15-ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்திற்கு முன்னதாக, தேசிய வீராங்கனைகள் வரிசையில் நின்றிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

​நேரலை ஒளிபரப்பின் போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நெகாராகூவை ஏளனம் செய்யும் வகையில் ஒலி எழுப்பியது தெளிவாகப் பதிவாகியுள்ளது.இந்த ஆட்டத்தில் இலங்கை அணியிடம் 60-க்கு 65 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்த மலேசியா, நான்காவது இடத்தைப் பிடித்தது.

​நெகாராகூவைஅவமதித்த நபரின் விவரங்கள் இதுவரை உறுதிச் செய்யப்படாத நிலையில், போட்டி ஏற்பாட்டாளர்கள் தரப்பிலிருந்தும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!