
கலிஃபோர்னியா, ஆகஸ்ட்-17-பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரியின் (Ferrari) முதல் முழுமையான மின்சாரக் கார், ஏலத்தில் சுமார் 40 மில்லியன் டாலர் விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற சோதேபிஸ் (Sotheby’s) நல்லெண்ண ஏலத்தில், ‘லூசே’ (Luce) என்ற இந்த கார் ஏலம் விடப்பட்டது.
இதன் மூலம், ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட புதிய கார் என்ற வரலாற்றுச் சாதனையை இது பெற்றுள்ளது.
Apple நிறுவனத்தின் முன்னாள் வடிவமைப்புத் தலைவர் Jony Ive ஒத்துழைப்புடன் வடிவமைக்கப்பட்ட இந்த கார், 4 கதவுகளையும், ஆயிரம் குதிரைத்திறனையும் (horsepower) கொண்டுள்ளது.
மின்சார வாகனப் பிரிவில் களமிறங்கியதற்காக ஆரம்பத்தில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும், வாடிக்கையாளர்களிடம் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக ஃபெராரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு ஃபெராரியின் Daytona SP3 மாடல் 26 மில்லியன் டாலருக்கு விற்பனையான சாதனையை இந்த ‘லூசே’ மின்சார கார் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



