Latestமலேசியா

LPT2 போக்குவரத்து விதிமீறலை மறைக்க RM14,000 லஞ்சம்: இரு போலீஸாரிடம் MACC விசாரணை

குவாந்தான், ஆகஸ்ட்-17-LPT2 எனப்படும் இரண்டாவது கிழக்குக் கரை நெடுஞ்சாலை வாகனமோட்டிகளிடமிருந்து சுமார் 14 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக இரண்டு போலீஸ் அதிகாரிகள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

​30 வயதுடைய ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் ஒரு ரோந்துப் பிரிவு அதிகாரியே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

​போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகனமோட்டிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, அவ்விருவரும் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை இத்தொகையைக் கையூட்டாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

​இப்பணம் இணைய வங்கிப் பரிவர்த்தனை மூலம் மூன்றாம் நபரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

​குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கான்ஸ்டபிள் 5 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள வேளையில், ரோந்து அதிகாரியின் தடுப்புக் காவல் மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

​இச்சம்பவம் குறித்து 2009 MACC சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாக பகாங் MACC கிளை உறுதிப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!