சாங்கி விமான நிலையக் கடைகளில் வாசனைத் திரவியங்கள் திருட்டு: ஆஸ்திரேலிய, அமெரிக்க ஆடவர்கள் கைது

சிங்கப்பூர், ஆகஸ்ட்-17-சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் _transit_ இடைமாற்றப் பகுதியில் உள்ள கடைகளில் வாசனைத் திரவியங்களைத் திருடியதாக, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இருவர் தனித்தனிச் சம்பவங்களில் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
37 வயது ஆஸ்திரேலியர் மற்றும் 50 வயது அமெரிக்கரான அவ்விருவர் மீதும் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவுச் செய்யப்படவுள்ளது.
கடந்தாண்டு நவம்பரில் இரண்டாவது முனையத்தில் சுமார் 430 வெள்ளி மதிப்பிலான வாசனைத் திரவியங்களைத் திருடிவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய ஆஸ்திரேலியர், 8 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சிங்கப்பூர் வழியாகப் பயணித்தபோது கைதுச் செய்யப்பட்டார்.
மற்றொரு சம்பவத்தில், முனையப் பகுதி ஒன்றில் உள்ள கடைகளில் 700 வெள்ளிக்கும் அதிகமான மதிப்புள்ள வாசனைத் திரவியங்களைத் திருடிய அமெரிக்கர், விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாகவே போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டார்.
கட்டடத்திற்குள் திருடிய குற்றச்சாட்டின் கீழ், அவர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.



