Latestமலேசியா

அடுத்தாண்டு முன்னோடி பள்ளிகள் திட்டம் அறிமுகம்; சிறந்த எதிர்காலத்திற்கான ஜோகூர் அரசின் முன்னெடுப்பு

ஜோகூர் பாரு, ஜூலை-27 – வளர்ச்சியடைந்த மற்றும் போட்டித்தன்மைமிக்க எதிர்கால ஜோகூர் சமுதாயத்தின் உருவாக்கத்திற்காக, மாநில அரசாங்கம் அடுத்தாண்டு முன்னோடி பள்ளிகளை (pilot schools) அறிமுகம் செய்யவுள்ளது.

மாநிலக் கல்வி இலாகாவின் ஒத்துழைப்போடு அத்திட்டம் மேற்கொள்ளப்படுமென ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காசி (Onn Hafiz Ghazi) தெரிவித்தார்.

STEM என சுருக்கமாக அழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியத் துறைகளோடு, ஆங்கில மொழியில் கற்றுத் தேருவதிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

தொடக்கக் கட்டமாக, ஓர் ஆரம்பப் பள்ளியையும், ஓர் இடைநிலைப் பள்ளியையும் அத்திட்டம் உட்படுத்தியிருக்கும்.

அதனை மாநிலக் கல்வி இலாகா முடிவுச் செய்யுமென டத்தோ ஓன் சொன்னார்.

ஜோகூரில் முன்னோடி பள்ளிகளை அறிமுகம் செய்வதற்கான இந்த முன்னெடுப்பு, மாநிலத்தின் சிறந்த எதிர்காலத்திற்கு நல்ல பலனைத் தருமென அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!