நாடு முழுவதும் உள்ள SPM பேரளவிலான தகுதியுடைய இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேஷன், ஆசாசி, பாலிடெக்னிக்குகள் மற்றும் பிற கல்வித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கத் தொடங்கும் போது, ஒரு அழுத்தமான பிரச்சினை ஏற்படுகிறது. இந்த மாணவர்கள் பொதுப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு இடங்கள் பற்றாக்குறையால் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் போது இடையூறுகளைச் சந்திக்க நேரிடும்.
மீண்டும் மீண்டும் இந்தப் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க வேண்டும். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்திய மாணவர்களுக்கான மருத்துவம், பொறியியல், கணக்குப்பதிவியல் மற்றும் சட்ட புளங்களில் இடங்களை அதிகரிக்க வேண்டும் என மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் கல்வி மேம்பாடு மற்றும் நலனபிவிருத்திச் சங்கத் தலைவர் ம.வெற்றிவேலன் கேட்டுக் கொண்டார்.