Latestமலேசியா

அன்வாருக்கும், நரேந்திர மோடிக்கும் நல்லுறவு உண்டு; இரு நாடுகளும் பெரும் பயனடையும் – ரமணன்

சுங்கை பூலோ, ஆகஸ்ட் 23 – நமது பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நல்லுறவு உள்ளதைக் காணமுடிகிறது என கூறியுள்ளார் துணையமைச்சர் ரமணன்.

இருவரும் நட்பு அடிப்படையில் நாட்டின் வளர்ச்சிக்குக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு விரிவான வியூகக் கூட்டமைப்புகளை அமைத்துள்ளனர்.

அதன் அடிப்படையில், வர்த்தக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளனர் என்றார் அவர்.

நாடு முழுவதும் மடானி விற்பனையில் பொருட்களை மலிவு விலையில் விற்கும் தொடர் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

10 விழுக்காடு முதல் 20 விழுக்காடு கழிவுகள் வரை இந்த விற்பனைகளில் வழங்கப்படுகிறது. ஆனால் மக்கள், அதனை பயன்படுத்திக் கொள்வதில்லை.

மேலும், கூட்டுறவு அமைப்பில் மூலதன நிதி உதவி திட்டங்களையும் தகுதியானவர்கள் பெற்றுக் கொள்வதுமில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.

எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் இந்தியர்களுக்கான கூட்டுறவு நாள் Hari Koperasi India நடைபெறவுள்ளது குறித்தும் தெரிவித்தார்.

இன்று சிலாங்கூர் மாநில அளவில் தேசிய கூட்டுறவு தினக் கொண்டாட்டத்தை தொடக்கி வைத்த பின், தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சர் அமைச்சர் டத்தோ ரமணன் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

இன்றைய விழாவில் 13 கூட்டுறவு சங்கங்களுக்குச் சிறந்த கூட்டுறவு விருதையும் வழங்கி கெளரவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!