Latestமலேசியா

அமெரிக்காவில், ‘குளோன்’ மறுபதிப்பு முறையில் செயல்பட திட்டமா? ; இல்லை என்கிறது டிக் டொக்

கோலாலம்பூர், ஜூன் 4 – அமெரிக்க நடைமுறைகளுக்கு ஏற்ப, “குளோன்” முறையில் செயல்பட டிக் டொக் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிக் டொக்கிற்கு தடை விதிக்க முயலும் அமெரிக்காவின் முயற்சிகளை முறியடிக்க ஏதுவாக சீனா அவ்வாறு செய்வதாக நம்பப்படுகிறது.

அதற்காக, அமெரிக்காவிற்கு என பிரத்தியேகமாக சிறப்பு டிக் டொக் பதிப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது. அந்த புதிய பதிப்பு சீனாவின் Douyin செயலி தலையீடு இன்றி தனிச்சையாக செயல்படும் என கூறப்படுகிறது.

டிக் டொக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸ், அதன் உரிமையை ஆறு மாதங்களுக்குள் கைவிட வேண்டுமென கட்டாயப்படுத்தும் சட்ட மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளதை அடுத்து, அந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், அந்த கூற்றை டிக் டொக் மறுத்துள்ளது. அமெரிக்க பயனர்களுக்காக மறுபதிப்பை உருவாக்கும் தகவல் முற்றிலும் தவறானது என, பைட் டான்ஸ் நிறுவனத்தின் அமெரிக்க செய்தி தொடர்பாளர் மைக்கேல் ஹியூஸ் கூறியுள்ளார்.

டிக் டொக் மூலம் பயனர்களின் தரவுகளை எடுக்க சீனா, பைட் டான்ஸ் என்ற நிறுவனத்தை பயன்படுத்தலாம் என்ற அச்சம் நீண்ட காலமாக பல நாடுகளுக்கு இருந்து வருகிறது.

அதனால், இந்தோனேசியா, இந்தியா, நியூசிலாந்து, பிரான்ஸ், டென்மார்க், கனடா என பல நாடுகள் டிக் டொக்கிற்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!