Latestஉலகம்

அமெரிக்காவில், புறப்பட்ட சில நொடிகளில், போயிங் விமானத்தின் டயர் கழன்று விழுந்தது ; வான் போக்குவரத்து துறையில் மீண்டும் பரபரப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூலை 9 – அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நொடிகளில், யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் விமானத்தின் டயர் ஒன்று கழன்று கீழே விழுந்தது.

கடந்த சில மாதங்களில், அமெரிக்காவில் விமானத்தை உட்படுத்தி நிகழ்ந்திருக்கும் இரண்டாவது சம்பவம் இதுவாகும்.

உள்நாட்டு நேரப்படி, திங்கட்கிழமை காலை மணி ஏழுக்கு, லாஸ் ஏஞ்சலஸ் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த போயிங் 757-200 ரக விமானத்தின் முக்கிய தரையிறங்கும் கியர் டையர்களில் ஒன்று தீடிரென கழன்று விழுந்ததாக யுனைடெட் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

டென்வரிலுள்ள தனது இலக்கை நோக்கி பயணத்தை தொடர்ந்த அந்த விமானம், சுமார் மூன்று மணி நேரத்திற்கு பின்னர் பாதுகாப்பாக தரையிறங்கியது.

எனினும், அவ்விமானம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் தாமதமாக தரையிறங்கியதாக கூறப்படுகிறது.

விமானத்தில் இருந்த 179 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

விமானத்திலிருந்து கழன்று விழுந்த டயர், லாஸ் ஏஞ்சலசில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வேளை ; அது திடீரென ஏன் கழன்று விழுந்தது என்பதை கண்டறிய, விசாரணை தொடங்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!