Latestஅமெரிக்காஉலகம்

அமெரிக்காவில் Hantavirus அச்சுறுத்தல்: சுகாதார அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகக் குற்றச்சாட்டு

வாஷிங்டன், மே-7-அமெரிக்காவில் Hantavairus பாதிப்பு குறித்த எச்சரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் இந்த ஆபத்தை மிகக் குறைவாக மதிப்பிடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த வைரஸ் பொதுவாக எலிகள் மற்றும் கொறித்து உண்ணும் விலங்குகளின் சிறுநீர், மலம் அல்லது எச்சில் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது.

இது உயிருக்கு ஆபத்தான சுவாச நோய்களை ஏற்படுத்தக்கூடியது.

இந்நிலையில், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது மற்றும் பொது மக்களுக்கு இது குறித்த விழிப்புணர்வைச் சரியாகக் கொண்டு செல்லாதது ஆகியவை சுகாதாரத் துறை மீதான அதிருப்தியை அதிகரித்துள்ளது.

ஏற்கனவே உலக நாடுகள் பல்வேறு தொற்றுநோய்களைச் சந்தித்து வரும் வேளையில், இது போன்ற புதிய அச்சுறுத்தல்களை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Hantavirus பரவல் குறித்து அமெரிக்க சுகாதாரத் துறை காட்டும் மெத்தனப் போக்கு, அந்நாட்டு மக்களிடையே அச்சத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.

முன்னதாக M/V Hondius சொகுசுக் கப்பலில் இந்த Hantavirus பரவியதில் மூவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட மற்றப் பயணிகளை அழைத்து வரும் பணிகள் மே 11-ல் தொடங்குகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!