
கோலாலம்பூர், ஜூலை 8 – அம்பாங் Taman Pandan Perdanaவில் உள்ள ஒரு வீட்டில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் 73 வயது நபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவ்விருவரும் தந்தையும் மகனும் என அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் துணைக் கமிஷனர் Mohd Azam Ismail தெரிவித்தார்.
ஜூன் 22 ஆம்தேதி சந்தேகப் பேர்வழியின் வீட்டில் ஆடவர் ஒருவர் இறந்து கிடக்கக் காணப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து இறந்தவரின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் தோல் மற்றும் எலும்புக்கூட்டில் காயங்கள் காரணமாக ஏற்பட்ட மென்மையான திசுக்களின் தொற்றினால் மரணம் அடைந்ததாக தெரியவந்தது.
இதன் தொடர்பில் 73 வயது ஆடவரும் அவரது 36 வயது மகனும் கைது செய்யப்பட்டனர்.
கடன் காரணமாக ஏற்பட்ட தகராறே அந்த நபரின் மரணத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டதாக Mohd Azam கூறினார்.
அவரை தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மூங்கில் பிரம்பு மற்றும் பிளாயரும் பறிமுதல் செய்யப்பட்டதோடு , இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.