Latestமலேசியா

அரசாங்கச் சேவையளிப்பைக் கண்காணிக்கும் குழுக்களை அமைக்க அரசு துறைகளுக்கு உத்தரவு

புத்ராஜெயா, ஆகஸ்ட்-21 – சேவை வழங்கல் மேம்பாட்டு கண்காணிக்குக் குழுவை (JP4) அமைக்குமாறு அனைத்து அமைச்சுகளும், அரசுத் துறைகளும் , அரசு நிறுவனங்களும் உத்தரவிடப்பட்டுள்ளன.

சேவையளிப்பை மேம்படுத்தும் பணிகளைக் கண்காணிக்க அது அவசியமென, பொதுச் சேவைத் துறையின் துணைத் தலைமை இயக்குநர் டத்தோ Dr அனெசீ இப்ராஹிம் (Anesee Ibrahim) தெரிவித்தார்.

மக்களுக்கானச் சேவையளிப்பின் தரத்தை விரைந்து உயர்த்துமாறு அண்மையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறுவுறுத்தியிருந்ததற்கு ஏற்ப அவ்வுத்தரவு அமைகிறது.

வாடிக்கையாளர் திருப்தி தொடர்பான விதிமுறைகளை புதுப்பிப்பதும் அவற்றில் அடங்குமென, ஆகஸ்ட் 19-ல் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் அவர் கூறினார்.

கண்காணித்து சேகரிக்கும் தகவல்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கையாக அளிக்குமாறும் அவை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!