சென்னை, ஜூன்-3 – அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் அவர்களின் மனைவியரும் தண்டிக்கப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.
தவறாகச் சம்பாதித்தப் பணத்தைக் குடும்பத்தார் அனுபவித்திருந்தால், அவர்களுக்கும் அதற்குரியப் பாதிப்பை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி சொன்னார்.
கற்பனைச் செய்ய முடியாத அளவுக்கு நாட்டில் ஊழல் மலிந்துக் கிடப்பதாகக் கூறிய அவர், வீட்டில் இருந்தே அது தொடங்குவதைச் சுட்டிக் காட்டினார்.
வீட்டில் இருப்பவர்களே ஊழலுக்குக் காரணமாக இருந்தால், ஊழலுக்கு ஒரு முடிவே இருக்காது என நீதிபதி சொன்னார்.
முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு எதிராகத் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் மனைவியின் தண்டனையை ரத்துச் செய்த மறுத்து, நீதிபதி அந்த அதிரடி தீர்ப்பை வழங்கினார்.
தவறான வழியில் சொத்து சேர்த்ததாக சக்திவேல் என்ற முன்னாள் sub-inspector மீது 2017-ல் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்த போதே அவர் இறந்ததால், உடன் குற்றம் சாட்டப்பட்டிருந்த மனைவி தெய்வநாயகிக்கு விசாரணை நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருந்தது.
முதன்மைக் குற்றவாளியான கணவரே இறந்து விட்டதால், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்துச் செய்யக் கோரி மனைவி செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த போது, சென்னை உயர் நீதிமன்றம் அந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.