Latestமலேசியா

அலாஸ்காவில் பனிப்பாறை உருகியதால் ஏற்பட்ட 1,578 அடி உயர மெகா சுனாமி; மீண்டும் நிகழக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை

அலாஸ்கா, செப்டம்பர்-23,அமெரிக்காவின் அலாஸ்காவில் ஏற்பட்ட 1,578 அடி உயர மெகா-சுனாமிக்கு பனிப்பாறைகள் வேகமாக உருகுவதே காரணம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

​அலாஸ்காவின் Tracy Arm பகுதியில், பனிப்பாறைகள் உருகியதால் ஏற்பட்ட நிலச்சரிவு இராட்சத அலைகளை உருவாக்கியது.

அப்பகுதியில் பயணித்த சுற்றுலா சொகுசுக் கப்பல்கள் சில மணி நேர இடைவெளியில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பின.

​பூமி வெப்பமயமாதல் காரணமாக உறைபனி உருகுவதும், மலைச்சரிவுகள் பலவீனமடைவதும் இத்தகைய பேரழிவுகளுக்கு வழிவகுப்பதாக பருவநிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பனி அடுக்குகள் குறைவதால் பூமியின் தட்டுகளில் அழுத்தம் மாறி நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.

​எதிர்காலத்தில் இதுபோன்ற மெகா-சுனாமிகள் அடிக்கடி நிகழக்கூடும் என்பதால், அப்பகுதிக்கான சுற்றுப் பயணப் பாதைகளை மாற்றியமைக்கவும், முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகளை நிறுவவும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!