
கோலாலம்பூர், செப்.24-சமூகத்தினரிடையே அதிகரித்து வரும் மாரடைப்பு, சர்க்கரை நோய், மன உளைச்சல் உள்ளிட்ட சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறப்பு மருத்துவக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அக்கருத்தரங்கு அக்டோபர் 10 ஆம் தேதி தோட்ட மாளிகையில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவிருக்கிறது.

மலேசிய மருத்துவச் சங்கத்தின் முன்னாள் தலைவர் Datuk Dr. N.G Baskaran தலைமையில் நடைபெறும் அக்கருத்தரங்கில் முதலுதவி மற்றும் CPR, மாரடைப்பு, சர்க்கரை நோய், கால் புண் பராமரிப்பு, மன உளைச்சல் மேலாண்மை, பக்கவாத மறுவாழ்வு மற்றும் ஆரோக்கியமான முதுமை உள்ளிட்ட தலைப்புகளில் மருத்துவ நிபுணர்கள் விரிவாகப் பேசவிருக்கின்றனர். அக்கருத்தரங்கில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் விளக்கங்கள் அளிக்கப்படும். இந்நிகழ்ச்சிக்கான சாதாரணக் கட்டணம் RM 129.
நிகழ்ச்சியில் பங்கேற்போருக்கு சுகாதாரப் பரிசோதனைகள், புற்றுநோய், சர்க்கரை நோய் பரிசோதனைகள், சுகாதாரக் கூப்பன்கள், நினைவுப் பரிசுப் பைகள் மற்றும் குலுக்கல் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. மேலும், காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலை நேரத் தேநீர் ஆகிய மூன்று வேளை உணவும் இலவசமாக வழங்கப்படும்.
இதனிடையே, B40 தரப்பினர் அக்கருத்தரங்கில் இலவசமாகக் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிறது. அது குறித்து மலேசிய மருத்துவச் சங்கத்தின் முன்னாள் தலைவர் Datuk Dr. N.G Baskaran நேற்றையே செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார்.
Interview Baskaran
B40 பிரிவினருக்கான 100 இடங்கள் மட்டுமே இருப்பதால், விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். கூடுதல் தகவல்களுக்கு பிரவீனா 012-781 0047 அல்லது ஷாம்லி 012-605 0050 எண்களில் தொடர்புகொள்ளலாம். மேலும் www.buminetworkconsultancy.com இணையதளத்திலும் தகவல்களைப் பெறலாம்.



