அலோர் காஜா, செப்டம்பர் -7 – மலாக்கா, அலோர் காஜாவில் உள்ள TASKA தினசரி குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் 8 மாத ஆண் குழந்தை நேற்று இறந்து கிடந்தது.
Kelemak-கில் உள்ள அம்மையத்திற்கு சில தினங்களுக்கு முன்பிருந்து தான் அக்குழந்தை அனுப்பப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை 9.15 மணியளவில் சுயநினைவற்ற நிலையில் குழந்தை இருந்தது கண்டு, பராமரிப்பாளர்களால் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டது.
எனினும் குழந்தை இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதிச் செய்தனர்.
போலீஸ் படையின் தடயவியல் பிரிவு நேற்றிரவு அம்மையத்தில் விசாரணை மேற்கொண்டதாகவும் தெரிகிறது.
சவப்பரிசோதனை முடிந்த கையோடு குழந்தை அடக்கம் செய்யப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டது.