அலோர் ஸ்டார், ஆகஸ்ட் 5 – அலோர் ஸ்டார் கிளினிக் ஒன்றில், மருந்துகள் எடுக்கக் காத்திருந்த பாட்டியிடம் கைவரிசையைக் காட்டியுள்ளன் திருடன், ஒருவன்.
60 வயது பாட்டிக்குப் பாரம்பரிய மருத்துவம் வழங்குவதாகக் கூறி ஆடவன் ஒருவன் பேச்சுக் கொடுத்திருக்கிறான்.
பாட்டி மறுக்கத் தொடங்கியதுமே, சில வினாடிகளில் அவ்விடத்தை விட்டு சென்றிருக்கிறான்.
இதனிடையே, அந்த பாட்டி கிளினிக்கில் தனது கடமைகளை முடித்த பிறகே, கழுத்தில் அணிந்திருந்த தனது 6,000 ரிங்கிட் மதிப்புள்ள தங்க நகை களவு போனதை உணர்ந்திருக்கிறார்.
உடனே கோத்தா செத்தார் காவல் நிலையத்திற்கு விரைந்தவர், அந்த ஆடவன் மீது புகார் அளித்துள்ளார்.
அந்த பாட்டியிடம் பேசிய அந்த ஆடவன்தான், கழுத்தில் நகை கழன்று விழுவது போல் இருப்பதாகக் கூறி, அதைத் தொட அருகில் வர முயன்ற பிறகே, அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளதாக, கோத்த சித்தார் மாவட்ட காவல்துறைத் தலைவரும் உதவி ஆணையருமான சித்தி நோர் சலவதி சாத் (Siti Nor Salawati Saad) தெரிவித்தார்.
சந்தேகிக்கப்படும் அந்த 152 மீட்டர் உயரமும், 60 வயது மதிக்கத்தக்க அந்த திருடனை, தற்போது போலீஸ் வலை வீசி தேடி வருகின்றனர்.