
கோலாலாம்பூர், மார்ச்-4-இஸ்லாமியர்களின் புனித நூலான அல் குர் ஆனை காலால் மிதித்த பல்கலைக் கழக மாணவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்றத்திலும் குற்றம் சாட்டப்பட்டு விட்டது.
இது பெரிதும் வரவேற்கக் கூடியது; அதற்காக பாராட்டுகள்.
ஆனால், இதே போன்று மற்ற சமயத்தைக் குறிப்பாக இந்து சமயத்தையும் இந்துக்களையும் தொடர்ந்து இழிவுப்படுத்தி வருபவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை என, செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்ச்சைக்குரிய சமய சொற்பொழிவாளர்களான சம்ரி வினோத், ஃபிர்டாவுஸ் வோங் மற்றும் Cikghu Chandra போன்றோருக்கு எதிராக ஆயிரக்கணக்கில் போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டபாடில்லை என லிங்கேஷ்வரன் மேலவையில் குறிப்பிட்டார்.
அல் குர்ஆன் விஷயத்தில் காட்டப்பட்ட அதே வேகம், முஸ்லீம் அல்லாத சமயங்கள் மீது மேற்கொள்ளப்படும் தொடர் தாக்குதல்களை முறியடிப்பதிலும் காட்டப்பட வேண்டும் என்றார் அவர்.
அதனை ஆமோதித்த தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் ஆர். யுனேஸ்வரன், எந்த பாகுபாடுமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இவ்வேளையில், இது போன்று சமயத்தை இழிவுப்படுத்தும் செயல்களை, ஏன் ஒருமைப்பாட்டு அமைச்சும் உள்துறை அமைச்சும் இணைந்து கையாளைக் கூடாது என்ற கேள்வியையும் லிங்கேஷ்வரன் முன்வைத்தார்.
அதற்கு பதிலளித்த யுனேஸ்வரன்…
எந்தவொரு சமயத்தையும் சீண்டும் அல்லது இழிவுப்படுத்தும் செயல்களுக்கு இடமில்லை.
அதே சமயம் அனைத்து சமயங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும்.
சட்டம் அனைவருக்கும் ஒன்றே – பாகுபாடின்றி நடவடிக்கை அவசியம் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.



