Latestமலேசியா

ஆகஸ்ட் முதல் மேலும் 6 டோல் சாவடிகளுக்கு JustGO விரிவாக்கம் – PLUS

கோலாலம்பூர், ஜூலை-16-இவ்வாண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதியில் இருந்து PLUS நிறுவனம் தனது JustGO தளத்தை அனைத்து டோல் சாவடிகளுக்கும் விரிவுப்படுத்துகிறது.

அதன் வாயிலாக மில்லியன் கணக்கான நெடுஞ்சாலைப் பயனர்கள் மிகவும் நெகிழ்வான டோல் கட்டணம் செலுத்தும் அனுபவத்தைப் பெறுவார்கள்.

நேற்று முதல் மேலும் ஆறு சுங்கச்சாவடிகளில் JustGO அறிமுகப்படுத்தப்பட்டது. Mambau, Lukut, Kempas, Tanjung Kupang, Lima Kedai, Perling ஆகியவையே அவை.

நாடு முழுவதும் முதல் தானியங்கி வாகனப் பதிவு எண் அங்கீகார (ANPR) திறந்த டோல் கட்டண முறையை அறிமுகப்படுத்துவதில் PLUS முன்னோடியாக இருக்கிறது.

பதிவு செய்த பயனர்கள் தங்கள் வாகனப் பதிவு எண்ணைப் பயன்படுத்தி டோல் கட்டணம் செலுத்தலாம் மற்றும் குறிப்பிட்ட டோல் சாவடிகளில் வழித்தட சுதந்திரத்தை அனுபவிக்கலாம்.

ANPR கேமராக்கள் பதிவு செய்யப்பட்ட வாகனப் பதிவு எண்களைப் படித்து, JustGOசெயலியில் இணைக்கப்பட்டுள்ள கட்டண அட்டை மூலம் டோல் கட்டணத்தைச் செலுத்துகின்றன.

பயனர்கள் மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்து, தங்கள் கணக்கு மற்றும் வாகனத்தைப் பதிவு செய்து, கட்டண அட்டையை இணைத்தால் மட்டுமே போதும்.

JustGO முதன் முதலில் இவ்வாண்டு ஜனவரியில், NSEயில் ஒன்பது டோல் சாவடிகளில் பொது முன்னோட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர், பல டோல் சாவடிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. ஆகஸ்ட் மாதம் PLUSசின் அனைத்து டோல் சாவடிகளிலும் அது அமலில் இருக்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!