Latestமலேசியா

ஆகஸ்ட் 12-ல் உச்சக்கட்டம்; கண்களுக்கு விருந்தளிக்க வரும் பெர்சைட் விண்கல் பொழிவை மலேசியர்கள் வெறும் கண்களாலேயே பார்க்கலாம்

கோலாலம்பூர், ஜூலை-21 – கண்களுக்கு அரிய, அதிசய விருந்தாக ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் நிகழும் பெர்சைய்ட் (perseid) எரி நட்சத்திர பொழிவை இவ்வாண்டும் மலேசியர்கள் காணலாம்.

ஆகஸ்ட் 24 வரை அது நீடிக்குமென்றாலும் உச்சக்கட்ட நிகழ்வை ஆகஸ்ட் 12-ஆம் தேதி இரவு 9 மணி தொடங்கி மறுநாள் அதிகாலை வரை காண முடியும்.

தேசிய அறிவியல் கோளரங்கம் (Planetarium Negara) தனது Instagram பக்கத்தில் அதனைத் தெரிவித்துள்ளது.

வானிலை நன்றாக இருப்பின், இந்த perseid எரி நட்சத்திரப் பொழிவு மிகவும் பிரகாசமாகத் தெரியும்.

உச்சக்கட்டத்தின் போது ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 100 விண்கற்கள் அல்லது நிமிடத்திற்கு இரண்டு விண்கற்கள் என்ற அளவில் இந்த நிகழ்வைக் காணலாம்.

இருட்டான இடங்களிலிருந்து வெறும் கண்களாலேயே அவற்றை மக்களால் பார்க்க முடியும்.

முடிந்த வரை ஒளியே இல்லாத இடங்களிலிருந்து பாருங்கள்; சாலை விளக்கு போன்ற சிறு ஒளியாக இருந்தால் கூட உங்களால் அதனை தெளிவாகக் காண முடியாது என Planetarium Negara கூறியது.

இவை விழும்போது நடுநடுவே சில தீப் பந்துகளையும் பார்க்கலாம்.

வழக்கத்திற்கு மாறாக சில பெரிய சிதைவு துண்டுகள் பூமியின் மேல், சில சமயங்களில் நம் காதுக்கு கேட்கக்கூடிய ஒலியுடன் வந்து விழுவதால் இந்த தீப்பந்துகள் தெரிகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!