Latestமலேசியா

ஆனந்த கிருஷ்ணனின் நல்லுடலுக்குச் செவ்வாய்க்கிழமை அஞ்சலி; பிரிக்ஃபீல்ட்ஸ் இல்லத்தில் நடைபெறும்

கோலாலம்பூர், டிசம்பர்-1,மறைந்த பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தான் ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணனின் நல்லுடல், வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி தொடக்கம் இறுதி மரியாதைக்கு வைக்கப்படும்.

கோலாலம்பூர், பிரிஃபீல்ட்ஸில் உள்ள அவரது இல்லத்தில் இரவு 8 மணி வரை அஞ்சலிக்காக அன்னாரது உடல் கிடத்தி வைக்கப்பட்டிருக்கும்.

மறுநாள் புதன்கிழமை லோக் இயூ இந்து மின் சுடலையில் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு அவரது உடல் தகனம் செய்யப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அரங்கில் மலேசிய இந்தியர்களின் முக்கிய அடையாளமாகத் திகழ்ந்த தான் ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணன், நவம்பர் 28-ஆம் தேதி தனது 86-வயதில் காலமானார்.

நாட்டின் மூன்றாவது பெரும் பணக்காரருமான அவர், Usaha Tegas, Maxis, MEASAT துணைக்கோள நிறுவனம் எனத் தொலைத்தொடர்புத் துறையில் பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர் ஆவார்.

ஆனந்த கிருஷ்ணனுக்கு ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர்.

ஒரே மகன் புத்த மதத்தைத் தழுவி துறவற வாழ்க்கையை ஏற்றுக் கொண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!