Latestமலேசியா

ஆபத்து நிறைந்த அனைத்து மரங்களையும் வெட்டுவீர்; கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு உத்தரவு

கோலாலம்பூர், மே 14  மலாக்கா முதலமைச்சர் Abdul Rauf Yusoh -வின் வாகனத்தின் மேல் மரம் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலை தவிர்க்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு அதிக ஆபத்து நிறைந்த மரங்களை உடனடியாக வெட்டும்படி கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் Zaliha Mustafa உத்தரவிட்டுள்ளார். மேலும் சுற்றுச் சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக,மரங்களை நடும் திட்டத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றம் மீண்டும் கொண்டு வரவேண்டும் என வெளியிட்ட சுருக்கமான அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டார். நேற்று மதியம் பெய்த கனமழையைத் தொடர்ந்து Jalan Pinang- கில் Rauf yusoh- வின் வாகனத்தின் மேல் மரம் விழும் நிலை ஏற்பட்டது.

Rauf- பிற்கு மெய்காவலர் பணியை வழங்கிய போலீஸ் காரும் மற்றொரு காரும் அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Rusdi Isa தெரிவித்தார். அந்த சம்பவத்தல் எவரும் காயம் அடையவில்லை. ஆனால் Jalan Pinang தற்காலிகமாக மூடப்பட்டது. இம்மாதம் 7ஆம் தேதி கடுமையான மழை மற்றும் காற்றினால் Jalan Sultan Ismail -லில் பெரிய மரம் ஒன்று விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததோடு 17 வாகனங்கள் சேதம் அடைந்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!