Latestமலேசியா

3,000 ரிங்கிட் இருந்த பையைக் களவாடிய நபரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ள காவல் துறை

ஜோகூரில் உணவுக் கடையொன்றில் மேசையில் வைக்கப்பட்டிருந்த கைப்பையை மர்ம ஆடவன் ஒருவன் கண் இமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்ற சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

Sanggar Kota உணவு வளாகத்தில் நேற்று பிற்பகல் 3.58 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது. அது தொடர்பான CCTV காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

உணவுக் கடை முன் நின்று கொண்டிருந்த 41 வயது பெண்ணை அணுகிய அடையாளம் தெரியாத அந்த ஆடவன், மேசையில் இருந்த அவரது கைப்பையை எடுத்துக் கொண்டு தப்பியோடியதாக கோத்தா திங்கி மாவட்டக் காவல் துறைத் தலைவர் Superintendan Yusof Othman தெரிவித்தார்.

கைப்பையில் அப்பெண்ணின் தனிப்பட்ட பொருட்கள் இருந்ததாகவும், அதன் மொத்த மதிப்பு ஏறக்குறைய 3,000 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. CCTV காட்சிகளின்படி, அவ்வாடவன் கைப்பையுடன் அருகிலிருந்த காரில் ஏறித் தப்பிச் சென்றுள்ளான்.

அச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!