Latestஉலகம்

ஆஸ்திரேலியாவில், 55 ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் காணாமல் போன சரக்கு கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

சிட்னி, ஜூலை 25 – 55 ஆண்டுகளுக்கு முன் விபத்துக்குள்ளாகி காணாமல் போன, MV Noongah கப்பலின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

1969-ஆம் ஆண்டு, ஆகஸ்ட்டு மாதம், எஃகை எற்றிக் கொண்டு, நியூ சவுத் வேல்ஸ் நீரிணையில் பயணித்த போது, மோசமான புயல் மழையில் சிக்கி அக்கப்பல் விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது.

சம்பவத்தின் போது அக்கப்பலில் 26 பணியாளர்கள் இருந்தனர்.

கப்பல் மூழ்கிய சில மணி நேரத்தில், பாதுகாப்பு அங்கிகளுடன் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஐந்து பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட வேளை ; இறந்த ஒருவரது உடல் மட்டுமே கிடைத்தது.

எஞ்சியவர்களுக்கு என்னவானது? அந்த கப்பலின் சிதைந்த பாகங்கள் எங்கே என்பது விளங்காத மர்மமாகவே இருந்து வந்தது.

அதனால், ஆஸ்திரேலிய வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய கடல் தேடல்களில் ஒன்றாகவும் அக்கப்பல் கருதப்பட்டது.

எனினும், கடந்த மாதம் ஆஸ்திரேலியாவின் அறிவியல் நிறுவனம் ஒன்று, உயர் தெளிவுத்திறன் கொண்ட கடற்பரப்பு மேப்பிங் மற்றும் வீடியோ காட்சிகளை பயன்படுத்தி, அக்கப்பலின் சிதைவுகள் இருக்கும் இடத்தை துல்லியமாக உறுதிச் செய்துள்ளது.

கடல் பரப்பிலிருந்து 170 மீட்டருக்கு கீழே ஆழ்கடல் தரையில், அக்கப்பலின் உடல் பாகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, முக்குளிப்பு நடவடிக்கை வாயிலாக, அக்கப்பலை பார்வையிடும் நடவடிக்கைகளும், அது ஏன் மூழ்கியது என்பதை கண்டறியும் நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!