Latestமலேசியா

இடைவிடாது கார்டியோவாஸ்குலர் உடற்பயிற்சியுடன் பளு தூக்கி ஜே பிரபாகரன் தேவர் ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்

லீப்பிஸ், ஜூன் 13 – உடற்பயிற்சி நிலையத்தை நடத்திவருபவரான கே.ஜே. பிரபாகரன் தேவர் (K Jey Prabakaran Thevar ) இடைவிடாது 13 மணி நேரம் கார்டியோவாஸ்குலர் உடற்பயிற்சியுடன் பளு தூக்கி சாதனை ஏற்படுத்தியுள்ளார். பகாங் லிப்பிஸின் (Lipis) மண்ணின் மைந்தரான டாக்டர் கே.ஜே எனப்படும் 27 வயதுடை பிராபாகரன் தேவர் செவ்வாய்க் கிழமை மாலையில் தொடங்கி தனது பயிற்சியை நேற்று காலை 10.30 மணியளவில் முடித்தார். அவரது இந்த சாதனையை ஆசிய புக் ஒஃவ் சாதனை புத்தகம் அங்கீகரித்திருப்பதாக அதன் தலைவர் செல்வராணி முத்தையா ( Selvarani Muthiah ) கூறினார். இந்த சாதனை ஏற்படுத்துவதற்காக கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து அவர் தயாராகி வந்தார்.

உண்மையில் கடநத ஏப்ரல் மாதமே இந்த சாதனையை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் குறிப்பிட்ட சில காரணங்களால் செவ்வாய்க்கிழமைவரை ஒத்திவைக்கப்பட்டதாக பிரபாகரன் தேவர் கூறினார்.
மீண்டும் ஒரு சாதனை ஏற்படுத்தி மலேசியா மற்றும் பஹாங்கிற்கு பெருமையை தேடிக் கொடுத்திருப்பதாகவும் தனக்கு பெரும் ஆதரவும் உற்சாகமும் வழங்கி வந்த தமது பெற்றோருக்கு குறிப்பாக தாயாருக்கு அவர் நன்றியை தெரிவித்தார். கிண்ணஸ் உலக சாதனையை ஏற்படுத்துவதே தமது அடுத்த இலக்கு என பிரபாகரன் தேவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!