இடைவிடாத ஊதுப்பத்தி புகையினால் சுவாசிக்க முடியவில்லை; சிங்கப்பூர் குடியிருப்புவாசிகள் ஆதங்கம்

சிங்கப்பூர், நவம்பர் -10,
சிங்கப்பூரில் குடியிருப்பு பகுதியொன்றில் வசிக்கும் ஆடவர் ஒருவர், தனது வீட்டின் கூடாரத்தில் தினமும் 3 மணி நேரம் இடைவிடாமல் ஊதுபத்தியைக் கொளுத்தி வைப்பதால், அப்பகுதி மக்கள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகியுள்ளனர்.
அப்புகை, முழு மாடி வழித்தடம் வரை நிரம்பி, மற்ற மற்ற வீடுகளுக்குள் நுழைந்து விடுவதால் சுவாசிக்க கடினமாக உள்ளதென்று மக்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சில குடியிருப்பாளர்கள் விசிறிகள் மற்றும் துணிகளைக் கொண்டு புகையை வெளியே தள்ள முயற்சித்தனர். ஆனால் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் மூடியிருந்தாலும், புகை இடைவெளிகளின் வழியாக வீடுகளில் நுழைந்து விடுகின்றது.
சம்பந்தப்பட்ட ஆடவரின் வீட்டிற்கு வெளியே ஆராதனைப் பொருட்களும் ஊத்துபத்தி தூள் தட்டும் காணப்பட்டதைத் தொடர்ந்து அவரின் வீட்டிற்குள் பல கடவுள் சிற்பங்களும் வைக்கப்பட்டிருந்தன.
ஊதுப்பத்தி புகையினால் ஏற்படும் இடையூறுகளை அந்நபரிடமே எடுத்துரைத்த போதிலும் அவரிடமிருந்து தகுந்த பதில் வராததால், குடியிருப்பாளர்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்து பிரச்சனையை சரியான முறையில் தீர்க்க முயற்சித்துள்ளனர்.



