Latestமலேசியா

இணைய பகடி வதை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பீர்; மலேசிய பல்லூடக ஆணையம் – போலீசிற்கு பிரதமர் அன்வார் கோரிக்கை

புத்ரா ஜெயா, ஜூலை 12 – Tik Tok பயனர் இஷா (Ehsa) கடந்த வாரம் தனது உயிரை மாய்த்துக்கொள்வதற்கு காரணமாக இருந்த இணைய பகடி வதையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தொடர்பு , பல்லூடக மலேசிய ஆணையம் மற்றும் போலீசிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இணைய பகடிவதையில் ஈடுபடுவோரின் போக்கு குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் அன்வார் தமது அதிருப்தியையும் கவலையையும் வெளிப்படுத்தியதாக தொடர்பு அமைச்சர் பாமி பாட்ஷில் ( Fahmi Fadzil ) தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தாம் Tik Tok குடன் தொடர்பு கொண்டதோடு இணைய பகடிவதை விவகாரத்தில் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் மற்றும் ஒத்துழைப்பை வழங்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் பாமி கூறினார். நாங்கள் அடுத்த வாரம் சந்திக்கிறோம் என அமைச்சரவைக்கு பிந்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சரும் இணைய மிரட்டலுக்கு உள்ளானதாகவும் ஆனால் அது தீவிரமானதல்ல மற்றும் நாங்கள் பார்ப்பது போலி கணக்குகள் தொடர்பான பிரச்னை என்று அவர் கூறினார். பிரதமர்துறையின் சட்டம் மற்றும் அமைப்புகளுக்கான சீரமைப்பு அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட் ( Azalina Othman Said ) உட்பட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புகள் நடத்தப்பட்டதாகவும் பாமி விளக்கினார்.

மேலும் இலக்கவியல் அமைச்சு, உள்துறை அமைச்சு, சட்டத்துறை தலைவர் அலுவலகம், புக்கிட் அமான் குற்றவியல் துறை ஆகியவற்றின் பிரதிநிதிகளிடமும் பேச்சு நடத்தப்பட்டிருப்பதாகவும் பாமி தெரிவித்தார். Esha எனப்படும் ராஜேஸ்வரிக்கு நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து இணையத்தள பகடிவதை மிரட்டல் பிரச்சினை மீண்டும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!