கோலாலம்பூர், ஏப் 4 – தமது வாழ்நாள் முழுவதிலும் சேமித்து வைத்திருந்த 230,000 ரிங்கிட்டை ஆடவர் ஒருவர் இணைய முதலீடு திட்டத்தில் இழந்தார். பாதிக்கப்பட்ட 30 வயதுக்குட்பட்ட ஆடவர் இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளதாக நீலாய் OCPD Superindent Abdul Malik தெரிவித்தார். ஜனவரி 15ஆம் தேதியன்று ஆடவர் ஒருவரிடமிருந்து தொபேசி அழைப்பை பெற்றதோடு Goldman Sachs Group முதலீட்டு திட்டம் தொடர்பாக பேசியதோடு இத்திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என தெரிவித்ததை நம்பி புகார்தாரர் பல்வேறு வங்கிக் கணக்குகளில் 11 முறை பணப் பட்டுவாடா செய்துள்ளார்.
ஆதாயம் தெரிவிக்கப்பட்ட தொகையை மீட்க முயன்று தோல்வி கண்ட பிறகே தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த ஆடவர் இது தொடர்பாக புகார் செய்திருப்பதாக Abdul Malik கூறினார். குற்றவியல் சட்டத்தின் 420ஆவது விதியின் கீழ் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் தெரிவிக்கும் இணைய முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன் முதலில் பேங்க் நெகாராவுடன் தொடர்பு கொண்டு மேல் விவரங்களை தெரிந்து கொள்ளும்படி Abdul Malik கேட்டுக்கொண்டார்.