
இத்தாலி, ஆகஸ்ட்-10 – இத்தாலியின் சிசிலி (Sicily) தீவு அருகே, 2,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ரோமானிய காலக் கப்பலின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மசாரா டெல் வல்லோ (Mazara del Vallo) அருகே 46 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்தக் கப்பல், கி.மு. முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக நம்பப்படுகிறது.
சுமார் 21 மீட்டர் நீளமுள்ள கப்பலில் நூற்றுக்கணக்கான ‘அம்ஃபோரா’ (amfora) எனப்படும் பழமையான பீங்கான் கொள்கலன்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை மது, ஆலிவ் எண்ணெய் மற்றும் தானியங்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய கலாச்சார அமைச்சர் அலெசாண்ட்ரோ ஜியூலி (Alessandro Giuli), இந்தக் கண்டுபிடிப்பு சமீபத்திய ஆண்டுகளில் கிடைத்த மிக முக்கியமான கடலடி தொல்லியல் கண்டுபிடிப்புகளில் ஒன்று எனக் குறிப்பிட்டார்.
தற்போது நிபுணர்கள் கப்பலின் வரலாறு மற்றும் அதன் சரக்குகள் குறித்து மேல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.



