Latestமலேசியா

இந்தியச் சமூகத்தின் வரலாற்றைப் பாதுகாக்க ‘சமூக ஆவணக்காப்பகம்’ திட்டம் தீவிரம் – ஒருமைப்பாட்டு அமைச்சு தகவல்

புத்ராஜெயா, மே-5-மலேசிய இந்தியர்களின் வரலாற்றுத் தடம் மற்றும் கலாச்சாரப் பொக்கிஷங்களைப் பாதுகாக்கும் நோக்கில், ‘சமூக ஆவணக் காப்பகம்’ (Community Archive) எனும் புதிய திட்டத்தை தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு முடுக்கி விட்டுள்ளது.

அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங்கின் முயற்சியில் உருவான இந்தத் திட்டம், கடந்த 2025 மே மாதம் கிள்ளானில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், மலேசிய இந்தியச் சமூகத்தின் இடப்பெயர்வு வரலாறு, தோட்டப்புற வாழ்க்கை முறை மற்றும் கல்விப் புரட்சி தொடர்பான அரிய ஆவணங்கள் சேகரிக்கப்படவுள்ளன.

எனவே, பொது மக்கள் தங்களிடம் உள்ள பழைய புகைப்படங்கள், குடும்ப ஆவணங்கள் மற்றும் ஒலி-ஒளிப் பதிவுகளை தேசிய ஆவணக்காப்பகமான Arkib Negara-விடம் ஒப்படைக்கலாம்.

ஏற்கனவே, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் மோகனன் பெருமாள் பல முக்கிய ஆவணங்களை வழங்கி இந்த முயற்சிக்கு வலுசேர்த்துள்ளார்.

இந்நிலையில் இவ்வாண்டு மார்ச் வரை சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான சமூக ஆவணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

2028-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ள இந்தத் திட்டத்தில் இணைந்து, சமூகத்தின் வரலாற்றை வருங்காலத் தலைமுறைக்காகப் பாதுகாக்க முன்வருமாறு இந்தியச் சமூகத்தினர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!