Latestமலேசியா

இந்தியச் சமூகத்தின் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் முன்னுரிமை அளிக்கும் பிரதமர் – டத்தோ ரமணன்

கோலாலம்பூர், ஜூலை-11, இந்நாட்டு இந்தியர்களின் பிரச்னைகளைக் களைவதிலும், அவர்களுக்கான தொலைநோக்குத் திட்டம் வெற்றியடைவதிலும் பிரதமர் காட்டி வரும் அக்கறை அளப்பரியது.

அந்த கடப்பாட்டை இன்றுவரை டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிச் செய்து வருவதாக, தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

இந்தியச் சமூகத்துடன் தொடர்புடைய அனைத்து நலத் திட்டங்களையும் வலுப்படுத்துவதோடு, அவற்றின் மதிப்புக் கூட்டப்பட வேண்டும் என்பதே பிரதமரின் விருப்பமாகும்.

அதன் காரணமாகத் தான் Tekun SPUMI Goes Big திட்டத்தின் கீழ் கூடுதலாக 3 கோடி ரிங்கிட், அமானா இக்தியார் வாயிலாக இந்தியப் பெண்களின் கரங்களை வலுப்படுத்தும் பெண் (PENN) திட்டத்திற்கு கூடுதலாக 5 கோடி ரிங்கிட், மற்றும் பேங்க் ராக்யாட் மூலமாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொழில்முனைவோருக்கான BRIEF-i கடனுதவித் திட்டத்திற்கு 5 கோடி ரிங்கிட் என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் தமதமைச்சின் கீழ் மேற்கண்ட திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாக டத்தோ ரமணன் சொன்னார்.

டத்தோ ஸ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் கடந்த நான்கே மாதங்களில் மொத்தமாக 13 கோடி ரிங்கிட் நிதியை இந்தியச் சமூகத்துக்காக ஒதுக்கியுள்ளது.

முந்தைய அரசாங்கங்களைக் காட்டிலும் அன்வாரின் ஒற்றுமை அரசாங்கமே இந்தியச் சமூகத்தின் பால் அதிக பரிவு காட்டி பெரும் நிதி ஒதுக்கீட்டைச் செய்து வருகிறது.

அதை யாரும் மறுக்கவோ மறைக்க முடியாது.

ஆனால் அரசாங்கத்தின் முயற்சிகளை சிறுமைப்படுத்தும் நோக்கில் சமூக ஊடகங்களில் சிலர் குறைக்கூறத் தான் செய்வார்கள்; அந்த சமூக ஊடக ‘சாம்பியன்களின்’ பேச்சுகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

மாறாக, அரசாங்க அனுகூலங்களிலிருந்து விடுபடாதிருக்க இந்தியச் சமூகம் அவ்வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!