லக்னோ, ஜூலை 10 – இந்தியாவின், வட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், இன்று அதிகாலை பால் டேங்கர் லோரியை மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில், குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.
பேருந்து, டேங்கரை பின்னால் இருந்து மோதியதாக கூறப்படுகிறது.
பீகாரிலிருந்து தலைநகர் புது டெல்லியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது, அந்த பேருந்து விபத்தில் சிக்கியது.