இந்தியா வழியாக ஐரோப்பா பயணமா? கடுமையான பரிசோதனைகளுக்குத் தயாராக மலேசியர்களுக்கு நினைவுறுத்து

புது டெல்லி, செப்டம்பர்-17,
இந்தியா வழியாக ஐரோப்பா பயணம் செய்யும் மலேசியர்கள் மீது கடுமையான சோதனைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக புது டெல்லியில் உள்ள மலேசிய உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய அதிகாரிகள், இடைநிறுத்தப் பயணிகளுக்கான சுயவிவர நடைமுறைகள் மீது கடுமையான விதிகளை அமல்படுத்தியுள்ளதே இதற்குக் காரணமாகும்.
எனவே கடப்பிதழ், விசா, திரும்பும் டிக்கெட், ஹோட்டல் முன்பதிவு, நிதி ஆதாரம் உள்ளிட்ட ஆவணங்கள் முழுமையாக இருப்பதை பயணிகள் உறுதிச் செய்துகொள்ள வேண்டுமென உயர் ஆணையம் நினைவுப்படுத்தியது.
அதோடு பிரச்னைகளைத் தவிர்க்க, புறப்படுவதற்கு முன் விமான நிறுவனம் அல்லது ஐரோப்பிய தூதரகத்துடன் சரிபார்க்குமாறு பயணிகளை அது கேட்டுக்கொண்டது.
விதிகளை பின்பற்றாததால் பலர் விமானத்தில் ஏற முடியாமல், மலேசியாவுக்கே திரும்ப தூதரக உதவியை நாடி வருவதை அடுத்து அது அறிக்கை வெளியிட்டது.
பயண ஆலோசனை குறித்த முழு அறிக்கைக்குத் திரையில் காணும் முகவரியை அணுகவும் https://web.facebook.com/malawakil.newdelhi.5