ஜகர்த்தா, அக் 16 – இந்தோனேசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கடலில் உல்லாசமாக பொழுதை கழிக்கச் சென்ற ஜோசுவா ரோனி என்ற 20 வயது இளைஞர் செல்பி எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த ராட்சஷ அலையினால் அடித்துச் செல்லப்பட்டார். கிழக்கு ஜாவாவில் உள்ள கடல் பகுதியில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. தனது 16 நண்பர்களுடன் கடலுக்கு சென்ற ஜோசுவா கரையோரம் இருந்தவாறு கடலின் அழகை ரசிக்துக்கொண்டே பலவித கோணங்களில் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென வந்த அலை அவரை கடலுக்குள் இழுத்துச் சென்றது. நேற்றுவரை கடந்த மூன்று நாட்களாக மீட்புக் குழுவினர் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட வந்தபோதிலும் ஜோசுவாவின் உடல் இன்னும் கண்டுப் பிடிக்கப்படவில்லை .கடலில் அடித்துச் செல்வதற்கு முன் ஜோசுவா செல்பி எடுத்துக் கொண்டிருக்கும் கட்சியைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.