கோலாலம்பூர், மே 16 – இ.பி.எப்பின் மூன்றாவது சேமிப்பு கணக்கான Flexi எனப்படும் நெகிழ்வான திட்டத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதற்கு இணைய மோசடி கும்பல்கள் தீவிரமாக வேலை செய்து வருவதால் பொதுமக்கள் குறிப்பாக இ.பி.எப் சந்தாதாரர்கள் தெளிவாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டனர். SMS குறுந்தகவல் மற்றும் ஊழியர் சேமநிதி நிறுவனத்தின் அதிகாரிகள் என கூறிக்கொள்ளும் இணைய மோசடி பேர்வழிகள் மோசடியில் ஈடுபடுவதற்கான சதி வேலையில் ஈடுபடும் சாத்தியம் அதிகமாக உள்ளது.
எனவே Fleksible கணக்கை மாற்றும் நடவடிக்கையில் சந்தாதாரர்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டுமென தனது இண்ஸ்டாகிரேம் சமூக வலைத்தளம் மூலம் இ.பி.எப் கேட்டுக்கொண்டுள்ளது. இணைய மோசடிக் கும்பலின் பேச்சுக்கு மயங்கி ஏமாந்துவிட வேண்டாமென இ.பி.எப் நினைவுறுத்தியுள்ளது. Flexi கணக்கின் மூலம் இ.பிஎப் சந்தாதாரர்கள் நேரடியாக நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 50 ரிங்கிட் முதல் 250 ரிங்கிட்வரை மீட்கமுடியும்.