Latestஅமெரிக்காஇந்தியாஉலகம்சிங்கப்பூர்

இரயிலில் தீ பரவியதாக புரளி; உயிர் பயத்தில் தண்டவாளத்தில் குதித்தவர்களை மற்றொரு இரயில் மோதி 13 பேர் பலி

மும்பை, ஜனவரி-23, இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் இரயிலில் தீப்பிடித்ததாக புரளி கிளம்பியதால், பதட்டத்தில் தண்டவாளத்தில் குதித்த பயணிகளை மற்றொரு இரயில் மோதி, 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஏராளமானோர் குதித்திருக்கலாமென நம்பப்படுவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

சம்பவத்தின் போது, மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் இருந்து உத்தர பிரதேசத்தின் லக்னோவுக்கு புஷ்பக் எக்ஸ்பிரஸ் எனும் இரயில் சென்றுகொண்டிருந்தது.

திடீரென இரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியதால் பயணிகள் கலவரமடைந்தனர்.

இரயிலில் புகையைப் பார்த்த சிலர், அபாயச் சங்கிலியை இழுத்து இரயிலை நிறுத்தினர்.

இரயில் நின்றதும் சுமார் 40 பயணிகள் உயிர் பயத்தில் பெட்டிகளை எடுத்துகொண்டு தண்டவாளத்தில் குதித்து கடக்க முயன்றனர்.

அப்போது மறுபுறத்தில் புது டெல்லியிலிருந்து பெங்களூரு நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த கர்நாடகா எக்ஸ்பிரஸ் இரயில் மோதியதில், 13 பேர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.

அவர்களில் 7 பேரின் சடலங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.

இரயிலின் அடியிலும் தண்டவாளத்திற்கடியிலும் உடல் பாகங்கள் சிதறிக் கிடக்கும் வீயோக்கள் வைரலாகியுள்ளன.

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

அதே சமயம், உண்மையிலேயே இரயிலில் தீ பரவியதா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் புகை வெளியேறியதா என்பது குறித்து இரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துயரச் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடும் அதிர்ச்சியும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபமும் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!