Latestமலேசியா

இராணுவ கொள்முதல் ஒப்பந்தங்கள்; விசாரணைக்காக 3 பேரிடம் MACC வாக்குமூலம் பதிவு

கோலாலாம்பூர், டிசம்பர் 25-மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, இராணுவக் கொள்முதல் ஒப்பந்தங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, 3 பேரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவுச் செய்துள்ளது.

2023 முதல் 2025 வரை வழங்கப்பட்ட 158 பெரிய ஒப்பந்தங்கள் மற்றும் 4,500-க்கும் மேற்பட்ட சிறிய திட்டங்களைச் சுற்றி விசாரணை நடக்கிறது.

சில நிறுவனங்கள் தொடர்ந்து உயர்ந்த மதிப்புள்ள ஒப்பந்தங்களை பெற்றதாக சந்தேகம் எழுந்துள்ளதை அடுத்து இவ்விசாரணைத் தொடங்கியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Cikgubard என அழைக்கப்படும் சமூக ஆர்வலரான Badrul Hisham Shaharin அளித்த புகாரின் அடிப்படையில் 2009 MACC சட்டத்தின் கீழ் இவ்விசாரணை நடைபெறுகிறது.

ஒரு மூத்த அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளில் மாதந்தோறும் 50,000 முதல் 60,000 ரிங்கிட் வரை பணம் வந்ததாகக் கூறி Cikgubard ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளார்.

தற்போது தற்காப்பு அமைச்சின் ஒப்பந்த ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நிதிப் பதிவுகள் ஆய்வு செய்யப்படுவதாகவும் அவ்வட்டாரங்கள் கூறின.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!