Latestமலேசியா

இலக்கிடப்பட்ட டீசல் உதவித் தொகையினால் வாங்கக்கூடிய விலையிலுள்ள வீடுகளில் மாற்றம் இல்லை

சைபர் ஜெயா, ஜூன் 20 – இலக்கிடப்பட்ட டீசல் உதவித் தொகை அமலாக்கத்தினால் வாங்கக்கூடிய வீடுகளின் விலைகள் தொடர்ந்து 300,000 ரிஙகிட்டிற்கும் குறைவாகவே இருக்கும் என வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை துணையமைச்சர் அய்மான் அத்திரா சாபு ( Aiman Athirah Sabu ) தெரிவித்திருக்கிறார். ஒருதலைப்பட்சமான விலையேற்றம் அல்லது நிர்வாக செலவுகள் உயர்வதை தடுப்பதற்கு ஆக்கப்பூர்வமான கண்காணிப்பை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவீன அமைச்சு நிலைநாட்டிவரும் என அவர் கூறினார்.

இதுவரை வீடுகளின் விலைகள் அதிகரிக்கவில்லை. வாங்கக்கூடிய விலையிலான வீடுகளின் விலைகள் தொடர்ந்து 300, 000 ரிங்கிட்டிற்கும் குறைவாகவே இருப்பதாக அய்மான் தெரிவித்தார். மேலும் கட்டுமான தொழில்துறையிலும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கவில்லையென்பதோடு அவை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார். தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையுடன் ஒருங்கிணைப்போடு Sentuhan Kasih Sepang தியாக நிகழ்வில் கலந்துகொண்ட பின் ஊடகவியலாளர்களிடம் பேசியபோது Athirah இத்தகவலை வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!