Latestமலேசியா

இலவச உணவுக்காக இராணுவ அதிகாரி போல் நடித்து வந்த மலேசிய ஆடவன்; உண்மை அம்பலமானது

ஈப்போ, ஜூலை 13 – இலவச உணவு பெறுவதற்காக இராணுவ அதிகாரி போல உடை அணிந்து நாடகமாடிய் வந்த மலேசிய ஆடவரின் செயல், இராணுவ பணியாளர் ஒருவரால் முறியடிக்கப்பட்டது.

அந்த ஆடவன் அணிந்திருந்த இராணுவ உடையில் ஏதோ தவறிருப்பதைக் கவனித்த இராணுவ பணியாளர், அவனின்  இராணுவ அட்டையைக் காண்பிக்கக் கேட்டுள்ளார், அதற்கு அவனோ தன் மலேசிய அடையாள அட்டையைக் காண்பித்துள்ளான்.

இதனால் சந்தேகம் பழுத்ததால், இராணுவ பணியாளர் உடனடியாக போலிஸ் புகார் செய்ததாகவும் சம்மந்தப்பட்ட நபரை போலிஸ் கைது செய்ததாகவும் ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர், உதவி கமிஷனர் அபாங் சைனால் ஆபிடின் அபாங் அக்மாத் (Abang Zainal Abidin Abang Ahmad) தெரிவித்தார்.

போலிஸ் இச்சம்பவம் குறித்து செஷன்ஸ் 140 கீழ் விசாரித்து வருகிறது, குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவ்வாடவனுக்கு 3 மாத சிறை அல்லது 1000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!