Latestமலேசியா

இல்லத்தரசி’ இல்லை; ‘தலைமுறையை உருவாக்குபவர்’ என தாய்மார்களுக்கு துபாயில் புதிய அங்கீகாரம்

துபாய், ஜூலை-5-அம்மாக்களுக்குப் புதிய மகுடம்…

ஆம், துபாயில் ‘Housewife’ என்ற சொல் இனி ‘Generation Shaper’ என மாற்றப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பைத் துபாய் இளவரசர் ஷேக் ஹம்டான் வெளியிட்டுள்ளார்.

அன்னையர் தினத்தை முன்னிட்டு இவ்வாண்டு இந்த மாற்றத்தை அவர் அறிவித்தார்.

ஒரு தாயின் பணி என்பது வெறும் இல்லப் பராமரிப்பு மட்டுமல்ல, அது ஒரு தலைமுறையைச் செதுக்கும் உன்னதப் பணி என்பதை உலகுக்கு உணர்த்தவே இந்தத் திட்டம்.

இனி அரசு ஆவணங்கள் மற்றும் சமூக நலத் திட்டங்களில் ‘Housewife’ என்பதற்குப் பதிலாக ‘Generation Shaper’ அதாவது ‘தலைமுறையை உருவாக்குபவர்’ என்ற சொல் பயன்படுத்தப்படும்.

‘தாய்மார்களே குழந்தைகளின் முதல் பள்ளிக்கூடம்’ எனக் குறிப்பிட்ட ஷேக் ஹம்டான், தேசத்தைக் கட்டமைப்பதில் அவர்களின் பங்களிப்பு ஈடு இணையற்றது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கை தாய்மார்களின் அர்ப்பணிப்புக்குச் சமூகத்தில் ஒரு புதிய மரியாதையையும், அங்கீகாரத்தையும் பெற்றுத்தரும் எனப் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

துபாய் அரசின் இந்த முன்னுதாரணமான முயற்சி, மற்ற நாடுகளிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!