Latestமலேசியா

காஜாங்கில் காரின் சன்ரூஃப் வழியாக குழந்தைகளை வெளியே தலை நீட்ட அனுமதித்த தாய் கைது

காஜாங், ஜூலை-5-சிலாங்கூர், காஜாங்கில் ஓடிக் கொண்டிருந்த காரின் _sunroof_ வழியாகத் தனது 2 பிள்ளைகளை வெளியே தலை நீட்ட அனுமதித்த பெண், போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

செராஸ், Kampung Batu 10 அருகேயுள்ள Grand Saga ​நெடுஞ்சாலையில் நிகழ்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலான இந்தச் சம்பவம், பலரது கண்டனத்திற்கு உள்ளானது.

பாதுகாப்பு விதிகளை மீறி, குழந்தையைப் பெரும் ஆபத்தில் தள்ளிய அந்த ஓட்டுநரின் செயல் குறித்து 2001 சிறார் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து வாக்குமூலம் பதிவுச் செய்ய காஜாங் போலீஸ் தலைமையகம் அழைக்கப்பட்ட 30 வயது அப்பெண் கைதானார்.

பிறகு போலீஸ் உத்தரவாதத்தின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார்.

​சாலையில் வாகனங்களை ஓட்டும்போது இத்தகைய அலட்சியமான செயல்கள், கடுமையான விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கக்கூடும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!