
ஜாசின், ஜூன் 23 -இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜாசினில் சிகையலங்கார கடைக்கு
வெளியே இளம் தொழிலதிபர் ஒருவரைக் கொலை செய்தது மற்றும் ஆபத்தான முறையில் கார் ஓட்டியது ஆகிய இரண்டு தனித்தனி குற்றச்சாட்டுகள் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வேலையில்லாத நபர் மீது இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் மசானா சினின் (Mazana Sinin) முன்னிலையில், மொழிபெயர்ப்பாளர் மூலம் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்டவரான 27 வயது பி.கோகிலநாதன் அதைப் புரிந்துகொண்டதாகத் தலையசைத்தார்.
ஜாசின் மாவட்டத்தில் உள்ள தாமான் ரிம் பாருவில் ‘சிகையலங்கார கடைக்கு முன் கடந்த 2024 ஆம் ஆண்டு 25 ஆம் தேதி இரவு மணி 8.39கும் 11 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், 24 வயதுடைய எம். வினுர்ட் (24) என்பவரைக் கொலை செய்ததாக இன்னும் பிடிபடாமல் இருந்துவரும் இதர மூவருடன் சேர்ந்து கோகிலநாதன் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
தண்டனைச் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் மற்றும் அதே சட்டத்தின் பிரிவு 34-உடன் இணைத்து இந்த குற்றச்சாட்டும் கொண்டு வரப்பட்டது.
கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்பதால், இக்குற்றச்சாட்டுக்கு அவரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்படவில்லை.
அவர் மீதான கொலை குற்றச்சாட்டு எதிர்வரும் ஆகஸ்டு 26 ஆம்தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்



