Latestமலேசியா

நாடு முழுவதும் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு RM20.8 மில்லியன் ஒதுக்கீடு; மடானி அரசு அதிரடி நடவடிக்கை

ஜோகூர் பாரு, ஜூன்-23 – நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசு, 20.8 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.

இதன் கீழ், 2 முக்கிய திட்டங்களை மித்ரா மற்றும் கல்வி அமைச்சு இணைந்து இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்துள்ளன.

ஜோகூர் பாரு, Jalan Yahya Awal தமிழ்ப் பள்ளியில் ‘கல்வி மடானி’ திட்டம் மற்றும் அரசாங்க உதவிப் பெற்றப் பள்ளிகளுக்கு தளவாடங்கள் மற்றும் உபகரணங்களை வழங்கும் நிகழ்வை கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் தொடக்கி வைத்தார்.

துணையமைச்சர் வோங் கா வோ, மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் ஆகியோரும் அதில் கலந்துகொண்டனர்.

B40 பிரிவைச் சேர்ந்த 10,410 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில், 8 மில்லியன் ரிங்கிட் செலவில் இந்தக் ‘கல்வி மடானி’ இலவச டியூஷன் திட்டம் வரும் ஜூலை மாதம் முதல் நாடு தழுவிய அளவில் தொடங்கப்படவுள்ளது.

அடுத்ததாக, அரசு உதவி பெறும் 362 தமிழ்ப்பள்ளிகளுக்கு, மேசை, நாற்காலிகள், ஆய்வகக் கருவிகள் உள்ளிட்ட புதிய தளவாடப் பொருட்களை விநியோகிக்க 12.8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான முதற்கட்ட விநியோகம் ஜூன் மாத தொடக்கத்திலேயே வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!