Latestமலேசியா

ஈப்போவில், சித்திரவதைக்கு இலக்கான 5 வயது சிறுமி மரணம் ; வளர்ப்பு பெற்றோர் கைது

ஈப்போ, ஜூன் 11 – பேராக், ஈப்போவில், துன்புறுத்தலுக்கு இலக்கானதாக நம்பப்படும், ஐந்து வயது சிறுமியின் மரணம் குறித்து விசாரணைக்கு உதவும் பொருட்டு, திருமணமான தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று காலை மணி 9.45 வாக்கில், சுயநினைவு இன்றி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் குறித்து, ராஜா பெர்மைசூரி பைனுன் (Raja Permaisuri Bainun) மருத்துவமனையின், மருத்துவ அதிகாரிகளிடம் இருந்து தகவல் கிடைத்ததாக, ஈப்போ போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் அபாங் ஜைனால் அபிடின் அபாங் அஹ்மாட் (Abang Zainal Abidin Abang Ahmad) தெரிவித்தார்.

அந்த சிறுமிக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அச்சிறுமியின் உடலை பரிசோதனை செய்ததில், அவரது பிறப்புறுப்பின் வெளிப்புறத்திலும், ஆசனவாயிலிலும் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அதோடு, அவரது உடல் முழுவதும், மழுங்கிய பொருளால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருப்பதும் தெரிய வந்தது.

அதனை தொடர்ந்து, சிலிபின் (Silibin), தாமான் மல்கோப்பிலுள்ள (Taman Malkop), வீடொன்றிலிருந்து, அச்சிறுமியின் வளர்ப்பு பெற்றோரான, 27 வயது பெண்ணும் அவரது 66 வயது கணவரும் கைதுச் செய்யப்பட்டதை, ஜைனால் உறுதிப்படுத்தினார்.

குற்றவியல் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ், விசாரணைக்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!